சர்வதேச சட்டம் சிலருக்கு பொருந்தும் சிலருக்கு பொருந்தாது – கட்டார் எடுத்துறைப்பு!
பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது தொடர்பான விசாரணையின் போது சர்வதேச சட்டம் சிலருக்குப் பொருந்தும் என்றும், ஆனால் சிலருக்குப் பொருந்தாதபோது “இரட்டைத் தரங்களை” நிராகரிப்பதாக சர்வதேச நீதிமன்றத்திடம் கட்டார் தெரிவித்துள்ளது.
“சில குழந்தைகள் பாதுகாப்பிற்கு தகுதியானவர்களாகக் கருதப்படுகிறார்கள், மற்றவர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்று கத்தார் மூத்த தூதர் முட்லக் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நிறவெறி ஆட்சியை பின்பற்றுவதாக சுட்டிக்காட்டிய அவர், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை மீறுவது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையை சரிசெய்ய நீதிமன்றத்திற்கு “தெளிவான ஆணையும் உண்மையில் பொறுப்பும் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை கத்தார், அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தற்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.