ஐரோப்பா

ஜெர்மனியில் பாடசாலையில் மாணவர்களின் தீர்மானத்தால் நெருக்கடி நிலை

ஜெர்மனியில் பாடசாலையில் கல்வி கற்க செல்லும் பொழுது பாடசாலை கல்வியை முழுமையாக நிறைவு செய்யாது இடையிலேயே பாடசாலை கல்வியை விட்டு விலகுவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

அதாவது 6 வீதமான மாணவர்கள் ஆக குறைந்தது சாதாரண தரத்தை கூட முற்று முழுதாக நிறைவு செய்ய முடிய வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணத்தினால் இளைஞர்களிடையே வேலை வாய்ப்பு மாற்று தன்மை அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஜெர்மன் நாட்டை மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இளைஞர்களிடையே வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது குறைவாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் இவ்வாறு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 17.4 சதவீதமாக உள்ளதாகவும், இதைவேளையில் ஜெர்மனியில் இவ்வாறு இளைஞர்களிடையே வேலை வாய்ப்பு இல்லாத சதவீதம் 5.6 வீதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்பானிய நாட்டில் 28.6 சதவீதமாகவும், சுவிடன் நாட்டில் 22.7 சதவீதமாகவும், பிரித்தானியாவில் இவ்வாறு இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பவர்களுடைய எண்ணிக்கையானது 11.6 சதவீதமாகவும், இந்நிலையில் அமெரிக்காவில் 7.3 சதவீதமாகவும் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!