இந்தியா செய்தி

இந்தியாவில் இந்த ஆண்டு 999 வெடிகுண்டு மிரட்டல்கள்

இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை 999 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலுள்ள விமான நிறுவனங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு நவம்பர் 14ஆம் திகதி வரை பதிவானதாகும்.

2023ஆம் ஆண்டைவிட இந்த முறை பதிவான மிரட்டல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

உள்ளூர், வெளியூர் விமானப் பயணச் சேவைகளுக்கு விடுக்கப்பட்ட அந்த மிரட்டல்களில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் வாயிலாகப் பெறப்பட்டவை.

ஆனால் அவை அனைத்தும் போலியானவை என்று உறுதிசெய்யப்பட்டன. நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல்கள் பகிரப்பட்டன.

மிரட்டல்கள் தொடர்பில் பொலிஸாரிடம் 256 புகார்கள் செய்யப்பட்டன. அந்தப் புகார்கள் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 55 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி