பிரித்தானியாவில் 95 வயதில் முதுகலைப் பட்டம் பெற்று சாதித்த நபர்

பிரித்தானியாவில் சரே (Surrey) பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் மார்ஜொட் (David Marjot) என்பவர் 95 வயதில் மேல்நாட்டுத் தத்துவப் படிப்பில் (Modern European Philosophy) முதுகலைப்பட்டம் முதுகலைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
72 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மருத்துவப் படிப்பை முடித்தார். டேவிட் மனநல மருத்துவராகப் பணிபுரிந்து பின்னர் ஓய்வு பெற்றார்.
“எனது நினைவாற்றல் முன்பு போல் இல்லை. அதனால் கடின உழைப்பைப் போட வேண்டியிருந்தது. சிறந்த ஆசிரியர்கள் கிடைத்தது எனது பாக்கியம். வயது ஆக ஆகத் தொடர்ந்து சவால்மிக்கச் செயல்களைச் செய்வது முக்கியம் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.
தற்போது அவர் பகுதி-நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்வது குறித்து யோசிப்பதாகக் கூறுகிறார்.
(Visited 21 times, 1 visits today)