இரண்டு ஆண்டுகளில் 94 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழப்பு – மனித உரிமைகள் குழு
2023ம் ஆண்டு அக்டோபரில் காசா போரில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 98 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்துள்ளனர் என்று இஸ்ரேலிய மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் குழு வெளியிட்ட இந்த அறிக்கை, அதிகாரப்பூர்வ பதில்கள், மருத்துவ ஆவணங்கள், பிரேத பரிசோதனை அறிக்கைகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட கைதிகளின் சாட்சியங்கள் மற்றும் பிற மனித உரிமை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளின் மரணத்திற்கான காரணங்களை மறைத்து வருவதாக உரிமைகள் குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்து வருவதாகவும், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த 98 பாலஸ்தீனியர்களில் அக்டோபர் 2023 முதல் ஆகஸ்ட் 2025 வரை 94 ஆவணப்படுத்தப்பட்ட இறப்புகள் அடங்கும் என்றும் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.




