90 களின் கனவு கன்னி – வைரலாகும் புகைப்படங்கள்
தை திருநாளான தமிழ் புத்தாண்டன்று நடிகை மீனா பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்களை
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
90 களில் தொடங்கி, 2000 கள் வரை தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருந்த நடிகை மீனா தனது திருமணத்திற்கு பின்னர் குறிப்பிட்ட கதைகளில் மட்டும் நடிக்கத் தொடங்கினார்.
இன்றைக்கும் மீனா நடிக்கிறார் என்றால் அந்த படத்தின் மீது ஆர்வம் ஏற்படும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.






