ரஷ்ய இராணுவ வீரர்கள் 90 சதவீதம் பேர் இறந்திருக்கலாம்: அமெரிக்கா வெளியிட்ட தகவல்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில் ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளின்படி, இது ரஷ்ய இராணுவத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதமாகும்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
இந்தப் போரில் இரு தரப்பினரும் பெரும் இழப்புகளைச் சந்தித்தனர். மேலும் இந்த போரினால் பொதுமக்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்த போரில் ரஷ்ய இராணுவத்தை சேர்ந்த 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் பலி அல்லது காயம் அடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளின்படி, இது ரஷ்ய இராணுவத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதமாகும்.
மேலும், இந்த சண்டையால் ரஷ்ய வாகனங்கள் மற்றும் கவச வாகனங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக, ரஷ்யாவின் போர் வாகனங்களின் நவீனமயமாக்கல் 18 ஆண்டுகளில் மிக மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது ரஷ்யா போருக்குப் பயன்படுத்திய பெரும்பாலான அதிநவீன வாகனங்கள் மற்றும் கவச வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.