ஐரோப்பா

வெளிநாடுகளுக்கு பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்கின்றதா பாகிஸ்தான்? வெளியான அறிக்கை

வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று பாகிஸ்தானின் ஆங்கில மொழி செய்தித்தாள் தி டான் தெரிவித்துள்ளது.

“பாகிஸ்தானிலிருந்து அதிக எண்ணிக்கையில் பிச்சைக்காரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டது, இது ‘மனித கடத்தலை’ தூண்டியுள்ளது” என்று அறிக்கை .தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் சுல்பிகர் ஹைதர், செனட் குழுவில் திறன்மிக்க மற்றும் திறமையற்ற தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பான விவாதத்தின் போது இதனைத் தெரிவித்தார்.

மேலும், சவுதி அரேபியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளுக்குள் நுழைவதற்காக பல பிச்சைக்காரர்கள் யாத்திரை விசாவைப் பயன்படுத்திக் கொள்வதும் தெரியவந்தது. அதிர்ச்சியூட்டும் வகையில், புனித தலங்களில் கைது செய்யப்பட்ட கணிசமான எண்ணிக்கையிலான பிக்பாக்கெட்டுகளும் பாகிஸ்தானியர்கள் என அடையாளம் காணப்பட்டது.

திறமையான தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதில் பாகிஸ்தானின் வரலாற்றுப் பங்கை வலியுறுத்திய அவர், தொழில் வல்லுநர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்நாட்டின் வெளிநாட்டுப் பணம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்கள் சவூதி அரேபியாவில் இருப்பதாகவும், 1.5 மில்லியன் பாகிஸ்தானியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பதாகவும், 0.2 மில்லியன் பேர் கத்தாரில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்