பிரேசிலில் விளையாட மறுத்த தாயை கொடூரமாக கொலை செய்த 9 வயது மகன்
பிரேசிலில் தாயைக் கொலை செய்த ஒன்பது வயது சிறுவன் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்த 37 வயதான தாயை சிறுவன் பல முறை கத்தியால் குத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளியில் சென்று விளையாடுவது தொடர்பாகத் தாய்க்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது.
பலத்த காயங்களுக்கு உள்ளான அந்தப் பெண், அயலவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகனின் கத்திக் குத்துக்கு இலக்கான தாய், ரத்த காயங்களுடன் தனது மகனைக் கட்டியணைக்க விரும்பியதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் சிறுவன் கைது செய்யப்படவில்லை எனப் போலீசார் கூறியுள்ளனர். பிரேசிலில் 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் மீது வழக்குத் தொடர முடியாது என்பது சட்டமாகும்.
தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பது குறித்துக் கொலை செய்த அச்சிறுவனுக்குத் தெளிவு இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





