மும்பையில் 9 திருநங்கைகள் தற்கொலை முயற்சி

ஆன்மீகத் தலைவர் சல்மா கான் (Salma Khan) மற்றும் கின்னர் மா சன்ஸ்தான் (Kinnar ma Sansthan) அமைப்புக்கு எதிராக சிலர் தெரிவித்த இழிவான கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மும்பையில் ஒன்பது திருநங்கைகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த கின்னர மா சன்ஸ்தான் அமைப்பு, இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் ஹிஜ்ரா சமூகங்களின் நல்வாழ்வுக்காக செயல்படுகிறது.
மும்பையில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் ஒன்பது பேரும் தற்கொலைக்கு முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இதேபோன்ற ஒரு துயர சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
(Visited 2 times, 2 visits today)