நாவலப்பிட்டி-உடுவெல்ல பிரதேசத்தில் பஸ் விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் காயம்

தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், மூன்று பாடசாலை மாணவர்கள், ஐந்து பயணிகள் மற்றும் பஸ் சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (09) காலை 6.45 மணியளவில் நாவலப்பிட்டி, உடுவெல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பயணம் செய்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)