வியட்னாமில் பேரூந்து விபத்தில் சிறுவர் உட்பட 9 பேர் பலி

வியட்னாமின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிறார் உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அதிகாலை இவ்விபத்து நிகழ்ந்ததாக வியட்னாம் அரசாங்கம் தெரிவித்தது.
மத்திய வியட்னாமின் ஹா தின் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.45 மணிக்கு விபத்து நேர்ந்தது. விபத்தில் மேலும் 16 பேர் காயமுற்றதாக அரசாங்கம் அறிக்கையில் தெரிவித்தது.
வியட்னாமில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்வுதுண்டு. இவ்வாண்டு முதல் காலாண்டில் மட்டும் 5,024 பேர் சாலை விபத்துகளுக்கப் பலியாகிவிட்டனர். இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 5,343ஐவிடக் குறைவு.
வியட்னாம் அரசாங்கத்தின் தேசியப் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டதைத் தொடர்ந்து இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.
விபத்துக்குள்ளான பேருந்து, தலைநகர் ஹனோயிலிருந்து டானாங் நகருக்குச் சென்றுகொண்டிருந்ததாக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பேருந்து சாலையிலிருந்து தடம்புறண்டு போக்குவரத்து சமிக்ஞைகளை மோதி கவிழ்ந்தது.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சொன்னது. உயிரிழந்தோர் நான்கிலிருந்து 49 வயதுக்க உட்பட்டவர்கள் என்றும் அரசாங்கம் தெரிவித்தது.