60 ஆண்டுகளுக்கு பிறகு இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற 88 வயதான அமெரிக்கப் பெண்

88 வயதான ஒரு பெண்மணி, கல்லூரி பட்டதாரி ஆக வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை இறுதியாக நிறைவேற்றியுள்ளார்.
ஜோன் அலெக்சாண்டர் ஆறு தசாப்தங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்ததால் பட்டம் பெற முடியாமல் போனது. தற்போது கல்வியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.
மைனே பல்கலைக்கழகத்தின் 160 ஆண்டுகால வரலாற்றில் ஜோன் அலெக்சாண்டர் தான் மூத்த பட்டதாரியாக இருக்கலாம்.
“இது எனக்கு இவ்வளவு அர்த்தம் தரும் என்று நான் உணரவில்லை, ஆனால் இப்போது என் இதயத்தில் ஒரு ஓட்டை குணமாகிவிட்டதாக உணர்கிறேன்,” என்று அவர் தெரிய்வித்துள்ளார்.
அலெக்சாண்டர் 1950 களின் முற்பகுதியில் மைனே பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவியாக இருந்தார், அப்போது அவரது கர்ப்பம் காரணமாக பட்டப்படிப்பு நிறுத்தப்பட்டது.
அவர் 1959 ஆம் ஆண்டு தனது கல்லூரிப் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில், அவர் தனது முதல் குழந்தையுடன் கர்ப்பமாகி, மாணவர் கற்பித்தலை முடிக்க அனுமதிக்கப்படவில்லை, இது பாடத்திட்டத்தின் கட்டாய பகுதியாகும்.