ஜனாதிபதி அநுரவின் நடவடிக்கையால் ஓய்வூதியத்தை இழந்த 85 எம்பிகள்

ஜனாதிபதி அநுர திஸாநாயக்க பாராளுமன்றத்தை திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாக கலைத்ததன் மூலம், முன்னாள் எம்.பி.க்கள் எண்பத்தைந்து பேர் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.
அந்த எம்.பி.க்கள் அனைவரும் புதிய எம்.பி.க்கள் மற்றும் அவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு பாராளுமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் முழு பதவிக் காலத்தையும் முடித்திருக்க வேண்டும்.
ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் எம்.பி.க்கு, எம்.பி.யின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக கிடைக்கும்.
இரண்டு பாராளுமன்ற பதவிகளை நிறைவு செய்யும் எம்.பி.க்களின் ஓய்வூதியம் ஐம்பத்தைந்தாயிரம் ரூபாவாகும்.
ஒன்பதாவது பாராளுமன்றம் ஆகஸ்ட் 20, 2020 அன்று தொடங்கியது.
அதன்படி, நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய இருந்தது.
எம்.பி.யின் சம்பளம் ஐம்பத்து நாலாயிரத்து முந்நூற்று எண்பத்தைந்து ரூபாய்.
அந்தச் சம்பளத்துடன், நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு ஒரு நாளைக்கு வருகைப் படியாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயும், நாடாளுமன்றம் இல்லாத நாட்களில் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயும் வழங்கப்படுகின்றது.