வட அமெரிக்கா

கனடிய அருங்காட்சியகத்தில் மாயமான 800 வரலாற்று பொருட்கள்

கனடாவின் அருங்காட்சியகத்திலிருந்து சுமார் 800 பொருட்கள் காணாமல் போய் உள்ளதாக தெரியவந்துள்ளது.அண்மையில் மேற்கொண்ட கணக்காய்வு நடவடிக்கைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பொருட்கள் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கணக்காய்வாளர் நாயக அலுவலகத்தின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தில் காணப்படும் பொருட்கள் தொடர்பான சரியான தகவல்கள் பேணப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் 800 பொருட்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.மேலும் அருங்காட்சியகத்தில் சுமார் 300 பொருட்கள் சரியான முறையில் பேணிப் பாதுகாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்