8 வருட மர்மம் முடிந்தது: தாயைக் கொன்ற வழக்கில் மகனின் வாக்குமூலத்தால் நீதி!
2016ஆம் ஆண்டு தனது மனைவி டான் ரோட்ஸைக் கழுத்தை அறுத்துக் கொன்ற குற்றத்திற்காக, பிரித்தானியாவின் ரெட்ஹில் பகுதியைச் சேர்ந்த தச்சன் ராபர்ட் ரோட்ஸ் (52) தற்போது குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டில் நடந்த முந்தைய விசாரணையில், ராபர்ட் ரோட்ஸ் தற்காப்புக்காகவே மனைவியைக் கொன்றதாகக் கூறி விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கொலை நடந்தபோது 10 வயதுக்குட்பட்டிருந்த ராபர்ட் ரோட்ஸின் மகன் அளித்த புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் சாட்சியத்தின் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தாயைக் கொலை செய்யத் தந்தை தன்னைப் பயன்படுத்திய சதித்திட்டத்தை அந்தக் குழந்தை நீதிமன்றத்தில் விவரித்தது. தான் ஓவியம் கொடுப்பதாகக் கூறி தாயின் கவனத்தைத் திசை திருப்பியதாகவும், அதன் பின் தந்தை டானைக் கொலை செய்ததாகவும் மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், ராபர்ட் ரோட்ஸ் தனது பொய்க் கதைக்கு ஒத்திருக்குமாறு நடிக்கும்படி குழந்தைக்கு மிரட்டல் விடுத்ததுடன், குழந்தையை ஆழமாகக் காயப்படுத்தியும் உள்ளார்.
2021இல் சிகிச்சையாளரிடம் மகன் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து, ராபர்ட் ரோட்ஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கொலை, குழந்தை மீதான கொடுமை மற்றும் நீதியின் பாதையைத் திசை திருப்பிய குற்றங்களுக்காக அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். துணிச்சலான மகனின் இந்தச் சாட்சியத்தால், பல ஆண்டுகளாக மறைந்திருந்த உண்மை தற்போது நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளது. ராபர்ட் ரோட்ஸிற்கான தண்டனை ஜனவரி 16 அன்று வழங்கப்படும்.





