ஐரோப்பா

ஆஸ்திரியாவில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 08 பேர் உயிரிழப்பு!

ஆஸ்திரியாவில் (Austria) தனித்தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 08 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட தொடர் பனிச்சரிவு காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய ஆஸ்திரியாவில் உள்ள ஸ்டைரியாவின் (Styria) முர்டல் (Murtal) மாவட்டத்தில் ஏழு பேர் கொண்ட குழு மலையேற்றத்தில் ஈடுபட்டது. அவர்களில் 03 பேர் பனிச்சரிவில் சிக்கி முழுமையாக புதையுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு பணியாளர்கள் பெரும் போராட்டத்தின் பின் அவர்களை மீட்ட போதும் குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக மற்றொரு குழுவில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக உள்ளூர் மலை மீட்புத் தலைவர் கெர்ஹார்ட் கிரெம்சர் ( Gerhard Kremser) தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!