திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் எட்டுபேர் வைத்தியசாலையில், அனுதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை-மொரவௌ பொலிஸ் பிரிவில் நேற்று (01.07) இவ்விரு விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன. இதில் எட்டுபேர் காயமடைந்த நிலையில், மஹதிவுல்வௌ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளளனர்.
அத்துடன் மஹதிவுல்வௌ விகாரையில் இடம் பெற்ற கலை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு வீட்டுக்குச் செல்லும்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி ஐவர் காயமடைந்துள்ளனர்.திருகோணமலையிலிருந்து அனுராதபுரம் நோக்கி மோட்டார் சைக்களில் பயணித்தவர் வீதியில் நடந்துச்சென்ற ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ் விபத்தில் காயமடைந்த இருவரும் மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து – கதிர்காமம் நோக்கி சுற்றுலா சென்ற பேருந்தொன்று வீதியை விட்டு விலகி இன்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளாகியது. இதில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், அவருடைய இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பத்மநாதன் பரதன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். சாரதியின் கவனயீனத்தால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவங்கள் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாரதியின் கவனயீனத்தால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவங்கள் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.