புர்கினா பாசோவில் உளவு மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டில் 8 பேர் கைது

புர்கினா பாசோவில், மனிதாபிமான அமைப்பில் பணிபுரியும் எட்டு பேர் கைது செய்யப்பட்டு உளவு பார்த்தல் மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட எட்டு பேரும் நெதர்லாந்தை தளமாகக் கொண்ட மனிதாபிமான பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச அரசு சாரா பாதுகாப்பு அமைப்பில் (INSO) பணிபுரிந்ததாக புர்கினா பாசோவின் பாதுகாப்பு அமைச்சர் மஹமடூ சனா குறிப்பிட்டுள்ளார்.
“அங்கீகாரம் இல்லாமல் முக்கியமான தரவுகளை சேகரித்ததாகக் கூறி” மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்பட்ட பின்னரும் ஊழியர்கள் அந்த அமைப்பிற்காக தொடர்ந்து பணியாற்றி வந்ததாக அமைச்சர் சனா குறிப்பிட்டுள்ளார்.
ஹேக்கை தளமாகக் கொண்ட மனிதாபிமான அமைப்பு, தனது ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்துள்ளது.
(Visited 5 times, 1 visits today)