குஜராத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் கைது
குஜராத்தின்(Gujarat) நவ்சாரி(Navsari) மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ(POCSO) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா(Bharatiya Nyaya Sanhita) ஆகிய பிரிவுகளின் கீழ் எட்டு பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ஜனவரி 7ம் திகதி வான்ஸ்டா(Vansta) நகரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி கழிப்பறைக்காக தனது வீட்டை விட்டு வெளியேறிய போது மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆண்கள் அவளைக் கடத்திச் சென்றுள்ளனர்.
அவர்கள் அவளை 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு ஐந்து நண்பர்களுடன் இணைந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஏழு பேர் 20-21 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் ஒருவர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவன் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





