உலக நாடுகளை உலுக்கிய இணையச் சேவைத் தடங்கல் – 8.5 மில்லியன் கணினிகள் பாதிப்பு

உலக நாடுகளை உலுக்கிய இணையச் சேவைத் தடங்கலால் உலகம் முழுவதும் சுமார் 8.5 மில்லியன் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தை அடுத்து முதன் முறையாக அந்த எண்ணிக்கையை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வரலாற்றில் ஏற்பட்ட இணைய ஊடுருவல் சம்பவங்களைவிட அண்மைய இணையச் சேவைத் தடங்கல் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.
CrowdStrike என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் சேதமடைந்த மென்பொருளை மில்லியன்கணக்கான பயனீட்டாளர்களுக்கு அனுப்பியதால் இணையச் சேவைகள் முடங்கின.
மென்பொருள்களை அனுப்புவதற்குமுன் எந்த அளவு அதைத் துல்லியமாகச் சரிபார்த்திருக்கவேண்டும் என்பதை அண்மைய சம்பவம் உணர்த்துவதாக Microsoft நிறுவனம் குறிப்பிட்டது.
(Visited 31 times, 1 visits today)