78ம் ஆண்டு நினைவு தினம்… அமைதி மணி ஒலித்து அஞ்சலி

நாகசாகி மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதன் 78ம் ஆண்டு நினைவு தினம் ஜப்பானில் இன்று அனுசரிக்கப்படுகிறது.
1945ம் ஆண்டு 2ம் உலகப்போரின் போது ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டு தாக்குதலை நடத்திய அமெரிக்கா, 3நாட்கள் கழித்து அதாவது ஆகஸ்ட் 9ம் திகதி நாகசாகி நகரத்தின் மீதும் அணுகுண்டு வீசியது.
இந்த இரு தாக்குதலிலும் 2லட்சத்து 15ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உலகை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி நாகசாகியில் அமைதி மணி ஒலிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் காணொளி வாயிலாக உரையாற்றிய ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்கு ஜப்பான் தொடர்ந்து போராடும் என்று உரையாற்றினார்.
(Visited 12 times, 1 visits today)