கிரீஸ் கடலில் அகதிகள் படகு மூழ்கியதில் 78 பேர் பலி

கிரீஸ் கடலில் அகதிகள் படகு மூழ்கியதில் 78 பேர் உயிரிழந்தனர்
லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கிச் சென்ற கப்பல் மூழ்கியதில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிரீஸ் கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மக்கள் என்று கூறப்படுகிறது.
அவர்கள் சென்ற படகு தெற்கு பெலோபொனீஸ் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது மீன்பிடி படகா அல்லது சரக்கு படகா என்பது உறுதி செய்யப்படவில்லை.
இன்று பிற்பகல் வரை சுமார் 104 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தகவலின்படி, கப்பலில் சுமார் 600 பேர் பயணித்துள்ளனர்.
பலத்த காற்றினால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 25 times, 1 visits today)