உத்தரபிரதேசத்தில் 35 வயது பெண்ணை மணந்த 75 வயது முதியவர் திருமணத்திற்கு அடுத்த நாள் மரணம்
உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்த 75 வயதான சங்ருராம், பல வருட தனிமைக்குப் பிறகு 35 வயது பெண்ணை மணந்தார். ஆனால் திருமணத்திற்கு அடுத்த நாள் அவர் உயிரிழந்துள்ளார்.
சங்ருராம் ஒரு வருடத்திற்கு முன்பு தனது முதல் மனைவியை இழந்து, அன்றிலிருந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் மறுமணம் செய்ய வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தினர், ஆனால் அவர் நேற்று ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான மன்பவதியை மணந்தார்.
தம்பதியினர் திருமணத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்து, பின்னர் உள்ளூர் கோவிலில் பாரம்பரிய சடங்குகளைச் செய்தனர்.
திருமணத்திற்கு பிறகு பேசிய மன்பவதி, தனது கணவர் “குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு வீட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் தனக்கு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், காலையில், சங்ருராமின் உடல்நிலை திடீரென மோசமடைந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
திடீர் மரணம் கிராமத்தில் ஊகங்களைத் தூண்டியுள்ளது. சில குடியிருப்பாளர்கள் இதை இயற்கையான நிகழ்வுகள் என்று தெரிவித்தாலும், சிலர் சூழ்நிலைகள் சந்தேகத்திற்குரியவை என்று நம்புகிறார்கள்.





