71% இஸ்ரேலியர்கள் காசா போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள்
பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 45,000 காசா மக்களைக் கொடூரமாகக் கொன்ற 422 நாள் போருக்கு எதிராக இஸ்ரேலில் போராட்டங்கள் பரவி வருகின்றன.
யுத்தத்தின் மூலம் பணயக்கைதிகளை விடுவிக்கும் தனது குறிக்கோளை அடைய இராணுவம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலியர்கள் ஹமாஸுடன் ஒரு ஒப்பந்தத்தை கோருகின்றனர்.
இஸ்ரேலிய ஊடகமான சேனல் 12 நடத்திய கருத்துக் கணிப்பின்படி, பெரும்பாலான இஸ்ரேலிய பொதுமக்கள், பணயக்கைதிகளை விடுவிக்கவும், போரை முடிவுக்கு கொண்டு வரவும் ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள்.
71% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், 15 சதவீதம் பேர் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். 14% பேர் கருத்தை குறிப்பிடவில்லை.
இஸ்ரேல் அசோசியேஷன் ஆஃப் ரேப் க்ரைசிஸ் சென்டரால் அக்டோபரில் நடத்தப்பட்ட மற்றொரு கணக்கெடுப்பில் 59 சதவீதம் பேர் மட்டுமே பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் போர்நிறுத்தத்துக்கும் ஆதரவளித்துள்ளனர்.
அப்போது 33 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இதில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், 33 சதவீத இஸ்ரேலியர்கள் காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி அங்கு யூதர்களின் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேனல் 12 நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. 51% பேர் எதிர்த்தனர். 16% பேர் வாக்களிக்கவில்லை.