நைஜீரியாவில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 70 தன்னார்வலர்கள் உயிரிழப்பு
மத்திய நைஜீரியாவில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 70 சமூக பாதுகாப்பு தன்னார்வலர்கள் கொல்லப்பட்டதாக குடியிருப்பாளர்களும் ஒரு தன்னார்வத் தலைவரும் தெரிவித்தனர்.
கனம் மாவட்டத்தில் உள்ள குகாவா மற்றும் புன்யுன் சமூகங்களுக்கு அருகில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மேடம் வனப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடந்ததாக தன்னார்வத் தலைவர் அலியு பாஃபா தெரிவித்தார்.
70க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் பல உடல்கள் மீட்கப்படலாம் என்றும் பாஃபா குறிப்பிட்டுள்ளார்.





