7 பிரிவுகளாக நடந்த எல்கை பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமுனி ஆண்டவர் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு 83ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி குதிரை – வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
இந்த போட்டியில் மதுரை, திருச்சி,தஞ்சாவூர்,
புதுக்கோட்டை இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் – மற்றும் குதிரைகள் போட்டியில் கலந்து கொண்டன.
இந்த போட்டியானது காலை மாலை என நடைபெற்ற உள்ள இதில் பெரிய மாடு, கரிச்சான் மாடு சிறிய குதிரை நடுக்குதிரை , நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு குதிரை என 7 பிரிவுகளாக இந்த போட்டியானது நடைபெற்றது
இதில் 100க்கும் மேற்பட்ட மாடுகளும் 70க்கும் மேற்பட்ட குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டது
இதில் இரட்டை
மாட்டுவண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கினை நோக்கி ஒன்றையொன்று முந்திச் சென்றன.
போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு 6 லட்சத்தி 13 ஆயிரம் ரொக்கப்பரிசும் கோப்கைகளும் வழங்கப்பட்டது.
பந்தைய நிகழ்ச்சியை காண சாலையின் இரு புறமும் 50000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.