குஜராத்தில் பாடசாலை வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 7 வயது சிறுமி
குஜராத்தின்(Gujarat) விஜாப்பூர்(Vijapur) நகரில் உள்ள ஒரு பாடசாலை வளாகத்தில் 2ம் வகுப்பு மாணவி ஒருவர் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 19ம் திகதி தனது பாடசாலைக்கு பின்னால் உள்ள தோட்டத்திற்கு ஒரு நபர் தன்னை அழைத்துச் சென்று தகாத முறையில் தொட்டதாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அதே நபர் நவம்பர் 20ம் திகதி மீண்டும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் வலது கையில் ஊசி போட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார் என்று சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக விஜாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜி.ஏ. சோலங்கி(G A Solanki) தெரிவித்தார்.




