மத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – உறவினர் கைது
மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) பர்வானி(Parwani) மாவட்டத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கால்வாயில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது உறவினர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜ்பூர்(Rajpur) காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, கால்வாயில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாக அதிகாரி ஜெகதீஷ் தாவர்(Jagdish Thawar) குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் நீரில் மூழ்கி இறந்ததால் மரணம் ஏற்பட்டதாகவும் ஜெகதீஷ் தாவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாலியல் பலாத்கார கொலை தொடர்பாக சிறுமியின் நெருங்கிய உறவினரான 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 25ம் திகதி இரவு, வீட்டிலிருந்து சிறுமியைக் கடத்திச் சென்று, கால்வாய் அருகே பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், பாலியல் வன்கொடுமையின் போது சிறுமி கத்தத் தொடங்கியபோது சிறுவன் அவளைக் கொல்லும் நோக்கத்துடன் கால்வாயில் வீசியதாக தெரிவித்துள்ளார்.




