துருக்கியில் இடிந்து விழுந்த 07 மாடிக் கட்டடம் – இருவர் உயிரிழப்பு!
துருக்கியின் கோகேலியில் (Kocaeli) நகரத்தில், இன்று அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
7 அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. இதில் 05 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்த துருக்கியின் மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கி பலியான ஹயூருனிஸ்ஸா (Hayrunissa) என்ற சிறுமி மற்றும் அவரது சகோதரர் முகமது எமிர் (Mehmet Emir) ஆகியோரது உடல்களை மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், பலியான குழந்தைகளின் மற்றொரு சகோதரியான திலாரா பிலிர் (Dilara Bilir) பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர்களது பெற்றோரின் நிலைக்குறித்து தெரியாததால் அவர்களைத் தேடும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், மாயமான பெற்றோரைத் தேடும் பணியில் துருக்கியின் மீட்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 627 வீரர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திடீரென 7 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததற்கு அங்கு மேற்கொள்ளப்படும் மெட்ரோ பணிகள்தான் காரணம் என உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.





