இத்தாலிய தீவில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்பு – 21 பேர் காணவில்லை
லம்பேடுசா தீவில் பயணித்த படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 21 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர் என்று இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தப்பியவர்கள் அனைவரும் சிரிய நாட்டவர்கள், லம்பேடுசாவிற்கு தென்மேற்கே சுமார் 10 கடல் மைல் (18.5 கிலோமீட்டர்) தொலைவில் மீட்கப்பட்டதாக காவல்படை தெரிவித்துள்ளது.
இத்தாலியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் (UNHCR) தலைவரான Chiara Cardoletti, உயிர் பிழைத்தவர்கள் “மோசமான” நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உயிர் பிழைத்தவர்கள்,லிபியாவில் இருந்து புறப்பட்டதாக மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்தனர், மேலும் அவர்கள் கப்பலில் இருந்த 28 பேரில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக தெரிவித்தனர்.
திரிபோலிக்கு மேற்கே உள்ள சப்ரதா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படும் படகில் சூடான் மக்களும் இருந்ததாக ஐநா அகதிகள் அமைப்பின் இத்தாலிய அலுவலகம் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.