கேரளாவில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த மருத்துவர் உட்பட 7 பேர் கைது
கேரளாவின்(Kerala) திருவனந்தபுரத்தில்(Thiruvananthapuram) நடந்த ஒரு பெரிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஒரு மருத்துவர் மற்றும் இளங்கலை பல் அறுவை சிகிச்சை மாணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அட்டிங்கல்(Attingal) மற்றும் நெடுமங்காட்(Nedumangad) மாவட்ட போதைப்பொருள் எதிர்ப்பு சிறப்பு நடவடிக்கைப் படைகளின் கூட்டு நடவடிக்கையில் ஒரு வாடகை வீட்டில் இருந்து MDMA மாத்திரை மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மருத்துவர் விக்னேஷ் தாதன், பல் அறுவை சிகிச்சை மாணவி ஹலீனா, அசிம், அவினாஷ், அஜித், அன்சியா மற்றும் ஹரிஷ் என அடையாளம் காணப்பட்டனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அவினாஷ் ஒரு தகவல் தொழில்நுட்ப ஊழியர், அசிம், அஜித் மற்றும் அன்சியா ஆகியோர் முன்பு பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தினர்.
சோதனையின் போது காவல்துறையினர் சுமார் நான்கு கிராம் MDMA மாத்திரை, 100 கிராம் கஞ்சா, இரண்டு கார்கள், இரண்டு பைக்குகள் மற்றும் பத்து தொலைபேசிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் குழு பெங்களூருவிலிருந்து(Bengaluru) போதைப்பொருட்களைக் கொண்டு சென்று மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.





