வவுனியாவில் பாடசாலையில் மீட்கப்பட்ட 7 மோட்டார் குண்டுகள்
வவுனியா – மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா – மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் இருந்து 7 மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர்.
இதன்போது மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மடுகந்தை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
(Visited 18 times, 1 visits today)





