வாழ்வியல்

சைனஸ் நோயை இலகுவாக குணப்படுத்த 7 வீட்டு மருத்துவம்

மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் வீட்டுக் கைமருத்துவத்தைப் பார்க்கலாம்.

1. எஸன்ஷியல் எண்ணெய்கள்:
தேவையானவை:
– 3-4 துளிகள் நீலகிரி தைலம்
– 3-4 துளிகள் லாவெண்டர் எண்ணெய்
– 3-4 துளிகள் எழுமிச்சை எண்ணெய்
அனைத்து எண்ணெய்களையும் கலந்து உங்கள் விரல்நுனிகளில் தடவுங்கள்
உங்கள் கழுத்து, நெற்றி மற்றும் கழுத்தின் பின்னால் தடவுங்கள்
இதை தினமும் சுவசிக்கும் போது மூக்கில் ஏற்பட்ட அடைப்புகள் நீங்கும்.

Sinus infection? Antibiotics won't help | CNN

2. ஆப்பிள் சைடர் வினிகர்:
இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை 6 அவுன்ஸ் குடிநீரில் கலந்து குடிக்கவும். இதை கொண்டு நீங்கள் கொப்புளிக்கவும் செய்யலாம். இது உங்கள் உடம்பில் உள்ள அமிலத்தன்மையை குறைத்து, உடலை சீர்ப்படுத்தும்.
3. வர மிளகாய் மிளகு டீ:

தேவையானவை:
– வர மிளகாய் பொடி 1 தேக்கரண்டி
– தேன் 2 தேக்கரண்டி
– எழுமிச்சை 1

அனைத்து பொருட்களையும் வெந்நீரில் கலந்து குடித்தால், சளித்தொல்லை விடுபடும்.

4. இஞ்சி:
தேவையானவை:
– 1-2 தேக்கரண்டி துருவிய இஞ்சி
– 1 கப் வெந்நீர்

இஞ்சியை வெந்நீரில் கலந்து சில நேரங்களுக்கு பின்பு வடிகட்டி பருகவும். ஒரு நாளைக்கு 3 கப் இஞ்சி டீக்கள் குடிக்கலாம். இஞ்சியில் பல நுன்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

Tips for treating chronic sinus infections

5. தேன்:
தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும், இது உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதோடு, கோழையை நீக்கி மூக்கு அடைப்புகளை சரி செய்யும்.

6. டீடாக்ஸ் குளியல்:
டீடாக்ஸ் குளியல் உங்கள் உடலை இதமாக மாற்றுவதுடன் அடைப்புகளை விடுபடச் செய்ய உதவும்.
டீடாக்சஸ் குளியலிற்கு தேவையானவை:

– எப்சம் உப்பு 1 கப்

– பேக்கிங் சோடா 1 கப்

– தேயிலை எண்ணெய் 8 துளிகள்

– வெந்நீர்

– பாத் டப்

செய்முறை:
அனைத்து பொருட்களையும் பாத் டப்பில் கலந்துவிடுங்கள். இதில் 15 நிமிடங்களுக்கு அமர்ந்து உங்கள் உடலை டீடாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

Sinus Infection Treatment and Remedies | Everyday Health

7. ஆவி பிடித்தல்
ஆவி பிடிப்பது ஒரு எளிமையான வழியாகக் கருதலாம். ஏனெனில் இதில் நீங்கள் எதையும் உட்கொள்ள வேண்டாம். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றி அதில் சில எஸன்ஷியல் எண்ணெய் துளிகளை ஊற்றவும். ஆவி பிடிக்கும் போது மூக்கில் உள்ள அடைப்புகள் நீங்கி மூச்சு சீரடையும்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான