வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது, இது சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது என்று அமெரிக்க நிலநடுக்க வல்லுநர்கள் தெரிவித்தனர்.
7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஃபெர்ண்டேலுக்கு மேற்கு-தென்மேற்காக 100 கிலோமீட்டர் தொலைவில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“பூர்வாங்க நிலநடுக்க அளவுருக்களின் அடிப்படையில். நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ தொலைவில் உள்ள கடலோரப் பகுதிகளில் அபாயகரமான சுனாமிக்கு சாத்தியமாகும்” என்று ஹொனலுலுவில் உள்ள தேசிய வானிலை சேவையின் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிக்கு அருகில் உள்ள எவரும் ஆபத்தின் சாத்தியம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.