8 நாட்களுக்குள் 67,762 சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கைக்கு கடந்த 8 நாட்களுள் மாத்திரம் 67 ஆயிரத்து 762 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஜனவரி 1 முதல் 8 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து 11 ஆயிரத்து 367 பேரும், ரஷ்யாவில் இருந்து 8 ஆயிரத்து 425 பேரும், இங்கிலாந்தில் இருந்து 6 ஆயிரத்து 67 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.
கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




