இலங்கை

இலங்கையில் 6,700 இணையவழிக் குற்றங்கள் பதிவு – அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்

இலங்கையில் இணையவழிக் குற்றங்கள் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா சேர்ட் (Sri Lanka CERT) அமைப்பு அறிவித்துள்ளது.

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 6,700 இற்கும் மேற்பட்ட இணையவழிக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சேர்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது நாட்டில் இணைய அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பதிவான சம்பவங்களில் சுமார் 600 சம்பவங்கள் நேரடியாக இணைய துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் நிதி மோசடிகள் போன்றவற்றுடன் தொடர்புடையவை ஆகும்.

இந்தக் குற்றச் சம்பவங்கள் அனைத்தும் பேஸ்புக் (Facebook), வட்ஸ்அப் (WhatsApp) முதலான சமூக ஊடக மற்றும் உரையாடல் தளங்களை மூலமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!