ஜெர்மனியில் உள்ள டெஸ்லா நிறுவனத்திலிருந்து காணாமல் போன 65,000 காபி கப்கள்!
எலான் மஸ்க்கின் தலைமையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க், எக்ஸ் தளம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது.அதிலும் ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய நாளிலிருந்தே, தினந்தோறும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அவரது பெயர் மீடியாவில் பரபரப்பான செய்திகளாகி வருகின்றன.
அதாவது ட்விட்டர் அலுவலக பொருட்களை எல்லாம் எலான் மஸ்க் ஏலம் விடப்போகிறாராம். ட்விட்டர் பறவை, ஒரு ப்ரொஜெக்டர், ஐமேக் டிஸ்பிளே, காபி இயந்திரங்கள், நாற்காலிகள், ஃபிரிட்ஜ், பிட்சா மேக்கர் இப்படி கிச்சன் பொருட்கள் அனைத்தும் ஏலம் விடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த ஏலம் வரும் ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும், இந்த ஏலத்தை முன்னணி ஏல விற்பனை நிறுவனம் ஒன்று மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 25 முதல் 50 டொலர்கள் விலையில் இருந்து ஏலம் தொடங்குமாம்.
இந்த ஏலம் வரும் ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும், இந்த ஏலத்தை முன்னணி ஏல விற்பனை நிறுவனம் ஒன்று மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 25 முதல் 50 டொலர்கள் விலையில் இருந்து ஏலம் தொடங்குமாம்.
சுமார் 1 பில்லியன் டொலர்கள் அளவுக்கான செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவன குழுவினரிடம் சொல்லியிருக்கிறாராம். அவர்களும் நிறுவனத்தின் கிளவுட் சேவை தொடங்கி செலவுகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. அதனால்தான், இப்படியொரு ஏலம் விற்பனை நடத்தப்போகிறார்களாம்.
ஏற்கனவே, ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில், 10% பணியாளர்களை குறைக்கும் திட்டத்தை எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இதைக்கேட்டதிலிருந்தே டெஸ்லா நிறுவனத்தின் ஜெர்மன் ஊழியர்களை கவலையில் உள்ளார்களாம். பணிப்பாதுகாப்பு, குறைவான ஊதியம் போன்ற பிரச்சனைகளை ஊழியர்கள் எதிர்கொண்டு வரும்நிலையில், பணியாளர்களை குறைக்கும் திட்டத்தையும் எலான் மஸ்க் கையில் எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் இந்த நிறுவனத்திலிருந்து 65,000 காபி கோப்பைகள் மாயமாகிவிட்டதாக புகார் ஒன்று கிளம்பியிருக்கிறது. அந்த ஃபேக்டரின் மேனேஜர் இப்படியோரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். அதாவது, அந்த ஆலையில் வேலைபார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில், ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றுவிடுகிறார்களாம். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், ஏற்கனவே ஆட்குறைப்பு, ட்விட்ட பொருட்கள் ஏலம் என நொந்துபோய் எலான் மஸ்க் உள்ள நிலையில், காபி கப்கள் 65,000 மொத்தமாக காணாமல் போயிருப்பது அதற்கு மேல் அவரை கவலைக்கொள்ள செய்துள்ளதாம்.