செய்தி தமிழ்நாடு

65 ஆம் ஆண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழாவை முன்னிட்டு 65 ஆம் ஆண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்று வருகிறது*

புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாடு,கரிச்சான் மாடு தேன் சிட்டு மாடு, பூஞ்சிட்டு மாடு என நான்கு பிரிவுகளிலும் அதேபோல் குதிரை வண்டி பந்தயத்தில் பெரிய குதிரை, நடு குதிரை என இரண்டு பிரிவுகளிலும் பந்தயம் நடைபெற்றது.‌

மேலும் இந்த மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயங்களில் புதுக்கோட்டை திருச்சி திண்டுக்கல் தேனி திருநெல்வேலி இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டுவண்டி பந்தயத்தில்  28 ஜோடி மாட்டு வண்டிகளும் குதிரை வண்டி பந்தயத்தில் 14 குதிரை வண்டிகளும் பங்கேற்றது.

மேலும் சாலைகளில் துள்ளி குதித்து சீறி பாய்ந்து சென்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளையும் அதேபோல் வண்டிகள் சரியான பாதையில் செல்ல சாரதிகள் மாடு மற்றும் குதிரைகளுக்கு இணையாக ஓடியதையும் சாலைகளின் இரு புறங்களிலும் நின்ற ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

மேலும் விமர்சையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு 10 கிராம் வெள்ளி நாணயம் மற்றும் 35,000 வரையிலான ரொக்க பரிசுகளும் வெற்றிக்கோப்பைகளும் வழங்கப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!