செய்தி

இலங்கையில் போதைப்பொருட்களுடன் 3 பெண்கள் உட்பட 626 பேர் கைது!

இலங்கையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருட்களுடன் 3 பெண்கள் உட்பட 626 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 26 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில்,போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 5 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 373 கிராம் ஹெரோயின்,160 கிராம் ஐஸ்,198 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி