ஸ்பெயினில் 6000 ஆண்டுகள் பழமையான ஜோடி காலணிகள் கண்டுபிடிப்பு!
ஸ்பெயின் நாட்டில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஒரு ஜோடி காலணியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியாவில் உள்ள குகைகளில் இருந்து 6000 ஆண்டுகள் பழமையான காலணி ஜோடி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.புல்லில் தயாரான இந்த காலணிகள் வௌவ்வால்கள் வசிக்கும் பழைய குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து இந்த காலணியை பகுப்பாய்வு செய்து பார்த்ததில் காலணி ஆராயிரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.
19ம் நூற்றாண்டில் சுரங்க நிறுவனம் ஒன்று இந்த வௌவ்வால் குகையை தோண்ட தொடங்கிய போது இந்த காலணிகளுடன் சேர்த்து மம்மி உடல்கள், காட்டுப்பன்றி பற்கள், தங்க கிரீடம் உள்ளிட் 76 கலைப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவை தற்போது ஸ்பெயின் ஆய்வாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
6000 ஆண்டுகள் பழமையான காலணிகள் குறித்து பேசிய ஆய்வாளர்கள், குகையில் குறைந்த ஈரப்பதம் இருப்பதால் அவை நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.தெற்கு ஐரோப்பாவில் சிறந்த முறையில் பதப்படுத்தப்பட்ட மிகவும் பழமையான தாவர இழை பொருட்கள் இதுவாகும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்