இலங்கை செய்தி

நாட்டை விட்டு வெளியேறிய 600 மருத்துவர்கள் நாடு திரும்புகின்றனர்

சுகாதாரத்துறையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையால் மருத்துவப் பயிற்சிக்காக வெளிநாட்டில் இருக்கும் வைத்தியர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போதுள்ள திட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது மருத்துவ சேவையில் பயிற்சி பெற்று வெளிநாடுகளில் உள்ள 600 வைத்தியர்கள் எதிர்வரும் 02 மாதங்களுக்குள் இலங்கைக்கு திரும்புவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதன்படி மீண்டும் வைத்தியசாலை சேவையில் இணைந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 63 வயதில் ஓய்வுபெறும் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களுக்கே இந்த வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார்.

அவ்வாறான வைத்தியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைக்கு அமைய ஓய்வு பெறலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 02 வருட காலத்திற்கு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.

இதேவேளை, ஓய்வுபெற்ற வைத்தியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டால், நடைமுறையை பின்பற்றுவது மிகவும் அவசியமானது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்களை சேவைக்கு அமர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சும் நிறுவன சட்டவிதிகளின் பிரகாரம் செயற்படுவதில் அக்கறை செலுத்த வேண்டுமென அதன் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீள் வேலைக்கு அமர்த்துவது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக் குறிப்பு சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை