உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ள அழுத்தம் கொடுத்த 60 வயது பெண் கொலை
திருமணம் செய்து கொள்ள அழுத்தம் கொடுத்த 60 வயது பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்(Hathras) மாவட்டத்தின் சந்த்பா(Chandpa) பகுதியில் உள்ள நாக்லா பூஸ் டிரிசெக்ஷனில்(Nagla Bhoose trisection) சாலையோரம் அருகே அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீவிர விசாரணைகளுக்கு பிறகு அந்தப் பெண் 60 வயது ஜோஷினா(Joshina) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்சில்(Tajganj) வசிக்கும் சந்தேக நபரான 45 வயது இம்ரான் என்பவரை காவல்துறையினர் கண்டுபிடித்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள ஜோஷினாவின் வீட்டிற்கு அருகில் இம்ரானின் மாமியார் வசித்து வந்ததால், இருவரும் அடிக்கடி சந்தித்து உறவை வளர்த்துக் கொண்டதாக தெரிகிறது.
நவம்பர் 10ம் திகதி திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள ஜோஷினா கொல்கத்தாவிலிருந்து(Kolkata) வந்ததாகவும், அப்போது இம்ரானின் வீட்டிற்குச் சென்று அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தனக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதால் இம்ரான் அவருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அதிக மன அழுத்தம் காரணமாக ஜோஷினாவை கழுத்தை நெரித்து கொன்றதாக இம்ரான் ஒப்புக்கொண்டுள்ளார்.





