நைஜீரியாவில் படகு விபத்தில் 60 பேர் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த வாரம் நைஜீரியாவின் வடக்கு நைஜர் மாநிலத்தில் மத விழா ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிய பெண்கள் மற்றும் குழந்தைகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 300 பயணிகளை ஏற்றிச் சென்ற மரப் படகு செவ்வாய்க்கிழமை இரவு கபாஜிபோ சமூகத்தைச் சுற்றியுள்ள நைஜர் ஆற்றில் மூழ்கியதில் சுமார் 160 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று மொக்வா உள்ளூர் அரசாங்கப் பகுதியின் தலைவர் ஜிப்ரில் அப்துல்லாஹி முரேகி தெரிவித்துள்ளார்.
வருடாந்த மௌலுத் கொண்டாட்டத்திற்குப் பிறகு முண்டியில் இருந்து கபாஜிபோவுக்குப் படகு திரும்பிக் கொண்டிருந்தபோது, பேரழிவு ஏற்பட்டதாக முரேகி புதன்கிழமை பிற்பகுதியில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
மேலும் படகு ஏன் மூழ்கியது என்பது இன்னும் தெரியவில்லை.
நைஜீரிய நீர்வழிகளில் பெரும்பாலான படகு விபத்துக்களுக்கு நெரிசல் மற்றும் மோசமான
பராமரிப்பு காரணமாகும்.