இலங்கை செய்தி

டிக்டாக்கில் மதுபான ‘தன்சல்’ காட்சியை பதிவேற்றிய 6 இளைஞர்கள் கைது

பொசன் பௌர்ணமி தினத்தன்று நடத்தப்பட்ட மதுபான ‘தன்சல’ காட்சியை சமூக ஊடகமான ‘டிக்டோக்’ தளத்தில் பதிவேற்றம் செய்து மதுபானத்தை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆறு இளைஞர்களை இலங்கை காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதால், பொலிஸ் மா அதிபர் (IGP) இது தொடர்பான விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதன்படி, 20 முதல் 25 வயதுக்குட்பட்ட 6 பேர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து வீடியோ தொடர்பாக நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் கட்டுநாயக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது, இளைஞர்கள் தங்கள் உறவினர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட வெற்று வெளிநாட்டு மது பாட்டில்களில் தேநீர் ஊற்றியதாகவும், டிக்டோக்கில் வீடியோ கிளிப்பை தயாரிப்பதற்காக இந்த செயலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த ஆறு பேரையும் கைது செய்த புலனாய்வு அதிகாரிகள், கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

(Visited 17 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை