அயர்லாந்தில் 6 வயது இந்திய வம்சாவளி சிறுமி மீது இனவெறி தாக்குதல்

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன். இவர் அயர்லாந்தில் 8 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறார். அவர் தனது கணவர், 2 குழந்தைகளுடன் தென்கிழக்கு அயர்லாந்தில் உள்ள வாட்டர் போர்டு நகரில் வசித்து வருகிறார்.
அனுபாவின் 6 வயது மகள் நியா வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தபோது அவரை சில சிறுவர்கள் தாக்கியுள்ளனர்.
சிறுமியின் முகம் உள்பட பல இடங்களை தாக்கினர். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி செல்லுங்கள் என்று கூறிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக சிறுமியின் தாய் அனுபா புகார் அளித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
(Visited 1 times, 1 visits today)