யாழில் திருமணமாகாத 6 பெண்கள் கர்ப்பம்
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மாத்திரம் ஆறு பெண்கள் திருமணமாகாத நிலையில் கர்ப்பம் தரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுவில் பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, அதே காலப்பகுதியில் 8 பேர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் 9 குடும்ப வன்முறைச் சம்பவங்களும் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமூக மட்டத்தில் அதிகரித்து வரும் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.





