தென்மேற்கு துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழப்பு
துருக்கியில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் ஒரு விமானம் தப்பித்த நிலையில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தெற்மேற்கு மாகாணமான இஸ்பர்ட்டாவில் வழக்கான பயிற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராத வகையில் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. இதில் ஒரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஒரு ஹெலிப்படர் விபத்துக்குள்ளானது.
இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விபத்துக்குள்ளான விமானம் வயல்வெளியில் விழுந்த இரண்டாக உடைந்தது என தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்ட்டுள்ளது .
(Visited 38 times, 1 visits today)





