ராஜபக்ஷக்களால் 6 இலட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் – பாட்டாலி சம்பிக்க ரணவக்க!
தொழிலாளர்களின் உரிமை பற்றி பேசும் ராஜபக்ஷர்களினால் கடந்த ஒரு ஆண்டுக்குள் மாத்திரம் ஆறு இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள் என 43 ஆவது படையணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ராஜகிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற, நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் சுமார் ஆறு இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்.
நாட்டு மக்களின் தொழில் உரிமைஇநிம்மதியாக வாழும் உரிமை ஆகியவற்றை இல்லாதொழித்த ராஜபக்ஷர்கள் இன்று உழைக்கும் மக்களின் உரிமை பற்றி பேசுகிறார்கள்.தங்களின் அரசியல் நோக்கத்துக்காக தொழிலாளர்களின் உரிமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நிலுவையில் உள்ள கடன்களினால் பாரிய நெருக்கடிகள் எதிர்காலத்தில் தோற்றம் பெறும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.