உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு – ஜெலென்ஸ்கி

உக்ரைன் முழுவதும் நகரங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா நடத்திய இரவு நேர தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று(22) தெரிவித்தார்.
கியேவ்( Kyiv), ஒடேசா(Odesa), செர்னிஹிவ்(Chernihiv), டினிப்ரோ(Dnipro), கிரோவோஹ்ராட்(Kirovohrad) பொல்டாவா(Poltava), வின்னிட்சியா(Vinnytsia), சபோரிஜியா(Zaporizhzhia), செர்காசி(Cherkasy) மற்றும் சுமி(Sumy) உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ரஷ்யா ராஜதந்திரத்தைப் புறக்கணிப்பதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார்.
மேலும் வலுவான தடைகள் மற்றும் நீண்ட தூர ஆயுத விநியோகங்கள் மூலம் அழுத்தத்தை அதிகரிக்க நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
ரஷ்ய தலைமை முக்கியமான பிரச்சினைகளை உணராத வரை, ராஜதந்திரம் பற்றிய ரஷ்ய வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் கூறினார்.
குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்யா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.